டேட்டாவை அள்ளித் தரும் பிஎஸ்என்எல் - தீபாவளிக்கு அசத்தல் ஆப்பர்... வேறெங்கும் கிடைக்காது!
பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் போன்று இல்லாமல் குறைந்த விலையில் நிறைவான பலன்களை வழங்கும் பல திட்டங்களை வைத்துள்ளது.
அந்த வகையில், தற்போது தீபாவளியை முன்னிட்டு பிஎஸ்என்எல் ஒரு சிறப்பு ஆப்பரை கொண்டுவந்துள்ளது. அந்த மலிவான ரீசார்ஜ் திட்டம் குறித்து இங்கு காணலாம்.
முன்னர் குறிப்பிட்ட அந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை 251 ரூபாய் ஆகும். இதன் வேலிடிட்டி 28 நாள்களாகும். இதில் ரீசார்ஜ் திட்டத்தில் 3 ஜிபி கூடுதல் டேட்டாவை பிஎஸ்என்எல் வழங்குகிறது.
இந்த திட்டத்தில் மொத்தம் 70 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மற்ற திட்டத்தை போலே இதிலும் Zing உள்ளிட்ட ஓடிடி பலன்கள் உள்ளன. இதில் தற்போது 3 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுவதால் மொத்தம் 73 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடோபோன் போன்ற நிறுவனங்களில் இதுபோன்று குறைந்த விலையில் எந்த திட்டமும் இல்லை என்பதுதான்.
ஜியோ 249 ரூபாய்க்கு வைத்திருக்கும் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி 23 நாள்கள்தான். இதில் மொத்தம் 46 ஜிபி டேட்டா தான் கிடைக்கும். அதேபன்று ஏர்டெல் 265 ரூபாய்க்கு வழஙஅகும் திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். 28 நாள்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் 28 ஜிபி டேட்டாதான் கிடைக்கும்.
வோடோஃபோனை எடுத்துக்கொண்டால் 24 நாள்கள் வேலிடிட்டி உடன் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதிலும் மொத்தம் 24 ஜிபி டேட்டா தான் கிடைக்கும். பிஎஸ்என்எல் 250 ரூபாயில் 73 டேட்டாவை கொடுக்கிறது. உங்களுக்கு அத்தகைய டேட்டா பயன்பாடு இருந்தால் தாராளமாக பிஎஸ்என்எல் இணைப்பை நீங்கள் பெறலாம்.