சூரியன் பெயர்ச்சி 2023, சனி-சூரியன் சேர்க்கை..இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

Mon, 13 Feb 2023-8:43 am,

2023 சூரியப் பெயர்ச்சி பலன்: இன்று முதல் கும்ப ராசியில் சனி, சூரியன் மற்றும் சுக்கிரன் போன்ற முக்கியமான கிரகங்களின் சேர்க்கை ஏற்படும். வரும் மார்ச் 15-ம் தேதி வரை இந்த சேர்க்கை இருக்கும். இது அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களின் விருப்பங்களை நிறைவேறும். உங்களின் திறமை வெளிவரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தை சற்று கவனித்துக் கொள்ளுங்கள்.

 

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பெரிய பதவி, மரியாதை, பணப் பலன்கள் கிடைக்கும். செல்வாக்கும் அதிகரிக்கும். 

 

மிதுன ராசி: இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களை கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் சுமாராக இருக்கும்.

 

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு, இந்த நேரம் சற்று சுமராகவே இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பயணத்தைத் தவிர்க்கவும்.

 

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். அரசு விதிகளை புறக்கணிப்பது தண்டனைக்கு வழிவகுக்கும். வாழ்க்கைத் துணையுடன் மன உளைச்சல் ஏற்படும்.

 

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் சுப பலன் கிடைக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகள் நீண்ட பயணம் செல்லலாம். பணத்தால் நன்மை உண்டாகும்.

 

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இனிமையான பலன்கள் கிடைக்கும். வேலை மாறுவதற்கு நல்ல நேரம்.

 

விருச்சிக ராசி: குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். வேலையிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.

 

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய நபர்களை சந்திப்பீர்கள்.

 

மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலை கிடைக்கலாம். சம்பளம் உயரும். 

 

கும்ப ராசி: உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் பாதிக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில நடவடிக்கைகளை எடுக்க இது ஒரு நல்ல நேரம்.

 

மீன ராசி: மீன ராசிக்காரர்கள் பாதிக்கப்படலாம். செலவுகள் அதிகரிக்கும். சில சிரமங்களில் சிக்கிக் கொள்ளலாம். மன அழுத்தம் நேரிடலாம். அதே சமயம் வெளிநாடு செல்லும் கனவும் நிறைவேறும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link