குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது பண மழை, குரு பார்வையால் ராஜயோகம்!!

Thu, 16 Feb 2023-6:56 pm,

குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் நுழையப் போகிறார். ஆகையால், இந்த மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. குருவின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண பலன்களையும் தொழிலில் முன்னேற்றத்தையும் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம். 

இந்தப் பெயர்ச்சி மேஷ ராசியின் லக்ன வீட்டில் நடக்கப் போகிறது. இந்த நேரத்தில், உங்கள் பணியிடத்தில் உங்கள் சக்தி அதிகரிக்கும். அதே சமயம் வாழ்க்கைத்துணையுடனான உறவில் பலம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிகப்படியான பலன் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். கடக ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் இந்த சஞ்சாரம் நடக்கப் போகிறது. இது வேலை மற்றும் பணியிடத்தின் ஸ்தானமாக கருதப்படுகிறது. ஆகையால் கடக ராசிக்காரர்களுக்கு குருவின் அருளால் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். 

குரு பகவான் மீன ராசியிலிருந்துதான் மேஷ ராசியில் நுழைகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரம் மீனத்திற்கும் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்த இடம் செல்வம் மற்றும் பேச்சுத்திறனின் ஸ்தானமாக கருதப்படுகிறது. 

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link