2.5 இலட்சம் ரூபாய் வரை டிஸ்கவுண்ட் தரும் ஜீப் 8வது ஆண்டு நிறைவுவிழா ஆஃபர்!
ஜீப் மெரிடியன் காரின் விலை ரூ. 31.23 லட்சம் முதல் ரூ. 39.83 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார், எம்ஜி குளோஸ்டர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்
ஜீப் இந்தியா ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடியுடன் 8வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது
ஜீப் இந்தியா காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யூவிகளில் ரூ. 2.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது, இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்,
இரண்டரை லட்சம் ரூபாய் தள்ளுபடியைத் தவிர, எட்டாவது ஆண்டுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அதன் முழு தயாரிப்பு வரம்பிலும் வாகன பரிமாற்றம், லாயல்டி மற்றும் கார்ப்பரேட் நன்மைகளும் உண்டு
ஜீப் வாடிக்கையாளர்களுக்கு கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் என கார் தொடர்பான சேவைகளுக்கு 7.8% தள்ளுபடிகள் கொடுக்கப்படுகிறது விற்பனைக்குப் பிறகான சலுகைகள் ஆகஸ்ட் 17 வரை செல்லுபடியாகும்.
ஆகஸ்ட் 31 வரை செல்லுபடியாகும் ஜீப் வழங்கும் முக்கிய நன்மைகளில் ஒன்று ஜீப் காம்பஸ் கார் வாங்கினால், ரொக்கத் தள்ளுபடியாக ரூ.2.50 லட்சம் வரை பணப் பலன்கள் கிடைக்கும். இதேபோல, ஜீப் மெரிடியன் காருக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி உண்டு
வாக்-இன் வாடிக்கையாளர்களுக்கு ரேங்லர் மற்றும் கிராண்ட் செரோக்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் சலுகைகள் கிடைக்கும்
பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது