Jeff Bezos விண்வெளிப் பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய புகைப்படங்கள்

Tue, 20 Jul 2021-10:00 pm,

விண்வெளி பயணத்தை சுற்றுலா பயணமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு சரித்திர சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ந்யூ ஷெப்பெர்ட் (New Sheperd) என்னும் விண்கலத்தில் ஜெஃப் பெசோஸ் இன்று விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

ஷெப்பர்ட் ராக்கெட் தனது வேகத்தைக் குறைக்க பாராசூட்டைத் திறந்தது. பிறகு  கணினி கட்டுபாட்டின் உதவியுடன் சரியான இடத்தில் தரையிறங்கியது.

(Photograph:AFP)

இன்றைய விண்வெளிப் பயணத்தில் பெசோஸ் உடன், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், அமெரிக்க நாட்டை சேர்ந்த 82 வயதுடைய, ஓய்வு பெற்ற மூத்த பெண் விமானி  வாலி பங்க் (Wally Funk), 8 வயது ஆலிவர் டையமென் (Oliver Daemen)  ஆகியோரும் சென்றனர். பயணத்தின் போது ஜெஃப் பெசோஸ் மற்றும் அவருடன் சென்றவர்கள் 10 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தனர்.

(Photograph:AFP)

பெசோஸ் விண்வெளிக்கு சென்ற ராக்கெட் முற்றிலும் தானியங்கி என்பதால் அதில் ஆபத்தும் உள்ளது என கூறப்பட்ட நிலையில், விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக சாதிக்கப்பட்டது.

(Photograph:AFP)

பெசோஸின் விண்கலம் பூமியிலிருந்து சுமார் 100 கி.மீ தூரம் வரை சென்றது.  மனிதர்களை ஏற்றிச் செல்லும் ப்ளூ ஆரிஜினின் விண்கலத்தின் முதல் விண்வெளிப் பயணம் வரலாறு படைத்துள்ளது.

(Photograph:AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link