பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள அகத்தியா படம்!
டாக்டர். ஐசரி கே. கணேஷ் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தான் "அகத்தியா".
"ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்" என்ற கதைக்கருவுடன், அதிநவீன CGI கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகி இருக்கும் "அகத்தியா" படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான "அகத்தியா" திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது.
இப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
2025 ஜனவரி 31 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க உள்ளது.