மீண்டும் ஜியோ ரூ.98 பிளான் ஆரம்பம், முழு விவரம் இங்கே!
கொரோன ஊரங்கு காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் அவ்வபோது புதிய மலிவான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். ஊரடங்கு விதிக்கபட்டு உள்ளதால் மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டெலிகாம் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளையும், இலவசங்களையும் அள்ளி வீசி வருகின்றன.
அந்தவகையில், ஜியோ நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேரக்கூடிய 98 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்தை புதிய வடிவில் கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த அந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. தற்போது வேலிடிட்டி, இலவச சேவை, இண்டர்நெட் அளவு ஆகியவற்றில் ஒரு சில மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
98 ரூபாய் திட்டமானது 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள், ஜியோ நிறுவன செயலிகளான ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி மக்களும் 98 ரூபாய் ஜியோ திட்டத்தை ரீச்சார்ஜ் செய்து கொள்ள முடியும். இது தொடர்பாக ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் இருக்கும் அனைத்து நெட்வொர்க் திட்டங்களைவிட மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரே திட்டம் தங்களுடைய 98 ரூபாய் திட்டம் எனக் கூறியுள்ளது.
கொரோனா காலத்தில் ஜியோ நிறுவனத்தின் மிக குறுகிய கால மற்றும் மலிவான ரீச்சார்ஜ் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. கொரோனா காலத்தில் அதிக அளவில் ரீச்சார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள் பயனளிக்கும் விதமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.