1 ஜிபி அல்ல, 2 ஜிபி அல்ல.. ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா.. ஜியோ மலிவான திட்டம்!
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக பல வகையான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் மலிவான திட்டத்தை குறித்து பார்ப்போம்.
ஜூலை மாதத்தில், ஜியோ-ஏர்டெல் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் தற்போதைய ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்தன. இதன் காரணமாக, பெரும்பாலான திட்டங்கள் மிகவும் விலை உயர்ந்ததாக ஆனது.
விலையுயர்ந்த திட்டங்களால், பெரும்பாலான பயனர்கள் குறைந்த கட்டணம் ரீசார்ஜ் திட்டங்களை கொண்ட டெலிகாம் நெட்வொர்க்களுக்கு மாறி வருகிறார்கள்.
தற்போது ஜியோ நிறுவனம் மலிவான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு நீங்கள் ரூ.600-700 செலுத்த வேண்டியதில்லை. ஜியோவின் இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்,
ஜியோவின் இந்த திட்டத்தின் விலை 449 ரூபாய். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். தினமும் 3 ஜிபி டேட்டா என மொத்தம் 84ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். தினசரி டேட்டா முடித்த பிறகு, உங்கள் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.
டேட்டாவைத் தவிர, இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.
நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்து, ரூ. 500க்கு குறைவான திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், இந்த திட்டம் உங்களுக்கு ஏராளமான டேட்டா உட்பட பால் நன்மைகளை வழங்கும்.