ஏர்டெல்லுக்கு செம ஷாக் கொடுத்த ஜியோ..! 25 மாநிலங்களில் கடையை விரித்தது

Mon, 11 Dec 2023-8:44 pm,

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி அதிவேக பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஏர்ஃபைபர் தற்போது மொத்தம் 25 மாநிலங்களில் அணுக கிடைக்கிறது. 

 

இந்த சேவை ஏற்கனவே 21 மாநிலங்களில் கிடைத்து வந்த நிலையில், தற்போது ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு புதிய மாநிலங்களில் விரிவடைந்துள்ளது.

 

இதன் மூலம், ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது தமிழ்நாடு, அசாம், சத்தீஸ்கர், டெல்லி, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஜார்கண்ட், கேரளா, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மிசோரம், மகாராஷ்டிரா, ஒடிசா, நாகாலாந்து, ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 25 மாநிலங்களில் அணுக கிடைக்கிறது.

 

ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் இரண்டு பிரிவுகளில் மொத்தம் 6 திட்டங்கள் கிடைக்கின்றன. ஏர்ஃபைபர் பிரிவின் கீழ் ரூ.599, ரூ.899 மற்றும் ரூ.1199 என மூன்று திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த மூன்று திட்டங்களும் 1000ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. 

 

ரூ.599 திட்டமானது 30 எம்பிபிஎஸ், ரூ.899 திட்டமானது 100 எம்பிபிஎஸ் மற்றும் ரூ.1199 திட்டமானது 100 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடை வழங்குகின்றன. ரூ.1199 திட்டமானது இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் வருகிறது.

 

ஏர்ஃபைபர் மேக்ஸ் பிரிவின் கீழ் ரூ.1499, ரூ.2499 மற்றும் ரூ.3999 என மூன்று திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த மூன்று திட்டங்களும் 1000ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. ரூ.1499 திட்டமானது 300 எம்பிபிஎஸ், ரூ.2499 திட்டமானது 500 எம்பிபிஎஸ் மற்றும் ரூ.3999 திட்டமானது 1ஜிபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடை வழங்குகின்றன.

 

ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் தற்போதைய விலைகள் மற்றும் நன்மைகள் பற்றிய மேலும் விவரங்களை ஜியோவின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link