ஜியோவின் டாப் டக்கர் பிளான்: மாதம் 249 செலவழித்தால் 388 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2.5 ஜிபி டேட்டா

Fri, 08 Dec 2023-5:32 pm,

இந்த திட்டங்கள் மாதம் ரூ.249 முதல் தொடங்கி, 388 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ், தினசரி 2.5 ஜிபி டேட்டா போன்ற பல சலுகைகளை வழங்குகின்றன.

 

ரூ.2999 திட்டம்: இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பின் ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதுமட்டுமல்லாம, அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Unlimited True 5G Data) சலுகையும் இந்த திட்டத்துக்கு பொருந்தும்.

 

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை ஒரு வருடத்துக்கும் மேல் பயன்படுத்திகொள்ளலாம்.

 

இந்த திட்டத்துக்கு முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி இருந்தது. ஆனால், தீபாவளியிலிருந்து இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மொத்தமாக 388 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் மாதாந்திர செலவு ரூ.249 ஆகும்.

 

ரூ.3178 திட்டம்: இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை முழுவதும் பயன்படுத்திய பின் ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதுமட்டுமல்லாம, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த திட்டத்துக்கு பொருந்தும்.

 

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ டிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். 

 

இந்த திட்டத்தில் ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மாதாந்திர செலவு ரூ.264 ஆகும். இந்த திட்டங்கள் அனைத்தும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டங்களில் வழங்கப்படும் சலுகைகள் மிகவும் ஈர்க்கக்கூடியவை.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link