ஜூலையில் 5 கிரகங்களின் நிலை மாற்றம்: யாருக்கு ஆதாயம்
புதன் பெயர்ச்சி:
புதன் கிரகம் ஜூலை மாதம் மூன்று முறை மாற்றம் காணவுள்ளது. ஜூலை 2 ஆம் தேதி, புதன் கிரகம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறுகிறது. அதன் பிறகு ஜூலை 16 ஆம் தேதி பெயர்ச்சியாகி அதன் பிறகு ஜூலை 31 ஆம் தேதி சிம்மத்தில் நுழையும். இது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கும். புதனின் இந்த ராசி மாற்றத்தின் பலன் அனைத்து மக்களின் வாழ்விலும் தெரியும். புதனின் இந்த இட மாற்றம் சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் இருக்கும்.
சனிப்பெயர்ச்சி:
ஜூலை 12-ம் தேதி சனி வக்ர நகர்வில் மகர ராசிக்குள் நுழையும். மேலும் அக்டோபர் 23 ஆம் தேதி இந்த ராசியில் அவர் வழக்கமான இயக்கத்துக்கு மாறுவார். அதன் பலன் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் காணப்படும். இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், பதவி உயர்வு நிறுத்தப்படலாம்.
சுக்கிரன் பெயர்ச்சி:
சுக்கிரன் ஜூலை 13 அன்று தனது சொந்த ராசியான மிதுனத்தில் நுழைகிறது. சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் ஏற்கனவே மிதுன ராசியில் உள்ளன. இந்த வழியில் திரிகி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல நிகழ்வுகள் நடக்கும்.
சூரியப் பெயர்ச்சி:
கிரகங்களின் ராஜாவான சூரியக் கடவுளும் ஜூலை 16 ஆம் தேதி மிதுன ராசியை விட்டு கடகத்தில் நுழைகிறார். பின்னர் ஆகஸ்ட் 17 வரை இந்த ராசியில் இருப்பார். இந்நேரத்தில் கடக ராசியில் சூரியன் பிரவேசிப்பது கடக சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. சூரியனின் இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றியை தேடித் தரும்.
குரு பெயர்ச்சி:
ஜூலை மாத இறுதியில், வியாழன் கிரகம் பின்னோக்கி நகரும். ஜூலை 28 ஆம் தேதியன்று குரு தனது பிற்போக்கு இயக்கத்தை தொடங்கும். நவம்பர் 24 ஆம் தேதி வரை வியாழன் இங்கு இருக்கும். குருவின் சஞ்சாரத்தால் பல ராசிகளின் வாழ்வில் அனுகூலமான பலன்கள் தெரியும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)