குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், கோடீஸ்வர யோகம்

Thu, 15 Feb 2024-3:52 pm,

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சியானது சாதகமான பலனைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் சொந்த தொழிலைத் தொடங்கலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். நிறைய மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியால் வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். வீடு, சொத்து வாங்கலாம். நிதி நன்மைகளை பெறலாம். குருவின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியானது மிகவும் நன்மை பயக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தியைப் பெறலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியானது வரப்பிரசாதமாக இருக்கும். நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் பெருகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சியானது சாதகமான பலனைத் தரும். அதிர்ஷ்டம் பெறலாம். அரசு வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மத நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம். 

கன்னி: குருவின் நட்சத்திர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை தரும். பணம் மற்றும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். பதவி உயர்வை பெறலாம்.

 

துலாம்: குருவின் நட்சத்திர  பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு சிறந்த நேரம். நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கும். தந்தையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். 

தனுசு: குருவின் அதிபதி தனுசு ராசி ஆகும். குருவின் நட்சத்திர மாற்றம் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் தரும், புதிய தொழிலைத் தொடங்கலாம். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link