குரு பெயர்ச்சியும் ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகமும்! ராஜ யோகம் பெறும் ‘சில’ ராசிகள்!

Sun, 15 Jan 2023-10:41 pm,

Jupiter Transit 2023: பிப்ரவரி 1, 2023 அன்று குரு 12-18 கோணத்தில் தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்திற்கு இணையான சுப பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சிம்ம ராசியின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் ஹம்ச பஞ்ச ராஜயோகம் உருவாகி வருகிறது. இது உங்களுக்கு மங்களகரமான பலனைத் தரும். வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

ஹம்சபஞ்ச மகாபுருஷ யோகத்தினால் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான பண பலன்கள் கிடைக்கப் போகின்றன. சுகபோகங்கள் அதிகரிக்கும். வாகனம், சொத்து போன்றவை வாங்கும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்ய முயற்சித்தால், அது வெற்றிகரமாக முடியும்.

ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகம், தனுசு ராசிக்காரர்களுக்கு நேரம் மிகவும் சாதகமானது. உங்கள் நிதி நிலைமை வலுவடையும். எதிரபாராத பண வரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். இந்த காலகட்டத்தில் திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைக்கும். மொத்தத்தில் மகிழ்ச்சி நிறைந்த காலமாக இருக்கும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link