ரேஷன் அட்டை ரத்தாகலாம்! இன்னும் ஒரு மாசம் தான்.. உடனே இந்த வேலையை முடிச்சிருங்க

Sat, 09 Nov 2024-1:55 pm,

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' மூலம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் மலிவு விலையிலும், இலவசமாகவும் நிறைய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

ரேஷன் அட்டை மூலம் நீங்கள் பெற்று வரும் அனைத்து சலுகைகளும் தடைப்படலாம். ஏனென்றால் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த பணியை இதுவரை செய்யாதவர்கள், கட்டாயம் இரண்டு மாதத்துக்குள் அந்த பணியை முடிந்து விடுங்கள். இல்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம். 

ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் பல நலத்திட்டங்களை அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கும் திட்டமும், நிதி உதவி வழங்கும் திட்டமும் அடங்கும். மத்திய அரசின் திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களை வழங்கப்படுகிறது.உணவு தானிய விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. 

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (ரேஷன் கார்டு eKYC-ஐ) செயல்முறையை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம். இதன் மூலம் அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களின் கறுப்புச் சந்தைப்படுத்துதலைத் தடுப்பதையும், உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யப்படும். 

ஆரம்பத்தில், e-KYC அப்டேட் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இறுதியாக டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேதிக்குள் e-KYC ஐ முடிக்கத் தவறினால், உங்கள் ரேஷன் கார்டு செயலிழக்க நேரிடும்.

ரேஷன் கார்டு eKYC-ஐ  அப்டேட் செய்யும் செயல்முறை எளிமையானது. பின்வரும் ஆவணங்களுடன் உங்கள் அருகிலுள்ள பொது விநியோக அமைப்பு (PDS) கடை அல்லது ஆன்லைன் மையத்திற்கு சென்று குடும்ப அட்டையை அப்டேட் செய்திக்கொள்ளலாம்.

1. ரேஷன் கார்டு eKYC அப்டேட் செய்ய தேவையான ஆவணங்களை வைத்துக்கொள்ளவும். 2. உங்கள் ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம். 3. அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை தேவை. 4. உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். 5. eKYC விருப்பத்தை கிளிக் செய்யவும் 6. ரேஷன் கார்டு எண் மற்றும் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். 7. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.  8. ரேஷன் கார்டு அப்டேட் செய்ய OTP ஐ உள்ளிடவும்.

ரேஷன் கார்டு eKYC-ஐ  அப்டேட் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் எனப்பார்த்தால், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, மொபைல் எண் கட்டாயம் தேவை

உங்கள் ரேஷன் கார்டு eKYC-ஐ புதுப்பித்த தடையில்லாப் பலன்களைத் தொடர்ந்து பெற தகுதியுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்கள் ஆவணங்களை கொண்டு நியமிக்கப்பட்ட மையங்களுக்குச் சென்று உங்களுக்கான காலக்கெடுவிற்கு முன் கட்டாயம் ரேஷன் கார்டு eKYC-ஐ அப்டேட் செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ரேஷன் கார்டு eKYC அப்டேட் செய்தால் தடையில்லா ரேஷன் விநியோகத்தை உறுதி செய்துக்கொள்ளலாம், கள்ளச்சந்தை மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க உதவும் மற்றும் விநியோக செயல்முறையை நெறிப்படுத்தலாம். இதன்மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link