ஒன்றாக கோவா சென்ற விஜய்-த்ரிஷா! சங்கீதாவிற்கு நீதி கேட்கும் நெட்டிசன்கள்..
15 வருடங்களுக்கு பிறகு விஜய்யும் த்ரிஷாவும் லியோ படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்த படத்தில் இடம் பெற்றிருந்த முத்தக்காட்சியை பார்த்ததில் இருந்தே, பலருக்கு “இவர்களுக்குள் ஏதேனும் இருக்குமோ...” என்ற கேள்வி நிலவி இருக்கிறது.
விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் நெருங்கிய தோழியாக இருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு, கடந்த 12ஆம் தேதி அவரது 15 வருட காதலர் ஆண்டனி தட்டில் உடன் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்ள, விஜய்யும் த்ரிஷாவும் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் ஒன்றாக பயணித்ததாக கூறப்படுகிறது.
விஜய், பட்டு வேட்டி சட்டையில் இருப்பது போன்ற போட்டோ வெளியானது. ஆனால், த்ரிஷா இந்த திருமணத்திற்கு சென்றாரா இல்லையா என்பது தெரியாமலேயே பலர் இருந்தனர்.
விஜய்யும் த்ரிஷாவும் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது, தற்போது பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.
விஜய்யின் பிறந்தநாளுக்கு த்ரிஷா பதிவிட்ட புகைப்படம், அதற்கு அவர் வெளியிட்டிருந்த கேப்ஷன், கூடவே சேர்த்திருந்த பாடல் என அனைத்தையும் ரசிகர்கள் தற்போது கனெக்ட் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். விஜய் இப்போது அரசியல் கட்சி தலைவராகவும் மாறியிருப்பதால், சில அரசியல் கட்சிகளின் ஐடி விங்க், அவரை கலாய்ப்பதற்கென்றே சில மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறது.
விஜய்யும் சங்கீதாவும், கடந்த சில வருடங்களாகவே ஒன்றாக இல்லை என கூறப்படுகிறது. இவர்களின் இரு பிள்ளைகளும் கூட, சங்கீதாவுடன் லண்டனில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
விஜய்-த்ரிஷா சென்ற வீடியோ லீக் ஆனதை தொடர்ந்து, விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கு நீதி கேட்கும் வகையில் #JusticeforSangeetha என்ற ஹேஷ்டேக்கை, பலரும் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.