காஜல் அகர்வாலின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்..!
காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லுவுக்கும் இன்று அக்டோபர் மும்பையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இத்தகவலை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 6-ம் தேதி சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இதனிடையே திருமணத்திற்கு முன்னர் வீட்டில் நடைபெறும் பூஜைகள், மெகந்தி வைத்தல் என திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் கமல்ஹாசன் உடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.