மகளிர் உரிமை தொகை இவர்களுக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது - லிஸ்ட் இதோ..!
தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் கொடுத்து வருகிறது. சுமார் 1 கோடியே 16 லட்சம் பயனாளிகள் இந்த திட்டத்தில் இருக்கும் நிலையில், புதிய பயனாளிகள் விரைவில் சேர்க்கப்பட இருகின்றனர். இதனை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால், ரேஷன் கார்டு வைத்திருக்கும் எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என அவர் கூறியதாக செய்தி வெளியான நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும்.
இதற்காக அரசு சில அடிப்படை தகுதிகளை நிர்ணயம் செய்துள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலங்கள், 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலங்கள் வைத்திருப்பவர்கள் தகுதியுடையவர்கள். ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயனாளிகள் ஆவார்கள்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்க முடியாது. கைம்பெண்கள், விதவைகளும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் பெற முடியும். ரேஷன் கார்டில் குடும்ப தலைவரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தாலும், அந்த குடும்பத்தின் தலைவியாக பெண் கருதப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெறலாம்.
குடும்ப தலைவிகள் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். இந்த திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகள், தங்கள் பகுதிக்குட்பட்ட நியாய விலைக் கடைகள் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே தகுதியான பயனாளி. இரண்டு பேருக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது.
ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள், வருமானவரி செலுத்துபவர்கள், மத்திய மாநில, ஊராட்சி, நகராட்சி ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மக்களால் தேர்வு செய்யப்படும் வார்டு உறுப்பினர்களை தவிர மற்ற யாரும் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர முடியாது.
ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் மேல் சரக்கு சேவை வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. ஏற்கனவே அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பலன்களை பெறும் பயனாளிகளுக்கு இந்த திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்காது.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர இருப்பதால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான பயனாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மகளிருக்கு இந்த குட்நியூஸ் வெளியாக வாய்ப்பு.