கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
)
இந்தியாவிலேயே பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaingar Magalir Urimai Thogai) தமிழ்நாட்டில் தான் தொடங்கப்பட்டது. திமுக கொடுத்த மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதி. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
)
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுகின்றனர். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. பலர் இந்த திட்டத்தில் இன்னும் சேர முடியவில்லை. காரணம் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு சில நெறிமுறைகளை வகுத்துள்ளது.
)
அதன்படி தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அரசு விதிகளின்படி இன்னும் சில ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர வாய்ப்புள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் தகுதியான பெண்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். அப்போது கடந்த முறை விடுபட்டுப்போன பெண்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள்.
அதேபோல், திருநங்கைகள், கணவனை இழந்த பெண்கள், தனியாக வசிக்கும் பெண்கள் உள்ளிட்டவர்களும் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியும். இதற்காக சில விதிவிலக்குகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதாவது திருநங்கைகள் தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து மாதம் ஆயிரம் ரூபாய்பெற முடியும்.
அதேபோல் குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் பெண்கள், கைம்பெண்கள் உள்ளிட்டோரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறலாம். ஒருவேளை ரேஷன் கார்டில் மனைவியின் பெயர் விடுபட்டிருந்தால் 21 வயது பூர்த்தியான வேறு பெண்கள் இருந்தால் அவர்கள் இந்த திட்டத்தின் பயனாளியாக கருதப்பட்டு ஆயிரம் ரூபாய் பெற முடியும்.
எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிமுறைகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். உங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். தகுதியிருந்தும் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காமல் இருந்தால் உங்களுக்கு இந்த தொகை கிடைக்க வாய்ப்பில்லை.