Kalki 2898 AD : கல்கி படத்தில் அதிக சம்பளம் யாருக்கு? ‘அந்த’ நடிகருக்குதான்...
கல்கி 2898 ஏடி படத்தை நாக் அஷ்வின் இயக்கியிருக்கிறார். கடைசியாக, பாகுபலி படத்தில் ஜாலியான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த பிரபாஸ், அதற்கு பிறகு இப்போதுதான் கல்கி 2898 ஏடி படம் மூலமாக அது போன்ற ஜோவியல் ரோலில் நடிக்கிறார்.
கல்கி திரைப்படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. இப்படம், சுமார் 600 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது.
சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் மகாபாரத போரை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து தென்னிந்தியாவின் பிரபல ஹீரோக்கள் பலரும் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
கமலும் அமிதாப் பச்சனும் கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்கு கல்கி படம் மூலம் ஒன்று சேர்ந்து நடித்திருக்கின்றனர்.
தீபிகா படுகோன், கல்கி படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட ரூ.20 கோடியை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன், கல்கி படத்தில் யாஷ்கின் எனும் கதாப்பாத்திரத்தில் வருகிறார். இவருக்கு இப்படத்தின் முதல் பாகத்தில் 10 நிமிட காட்சிகளே கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த பாகத்தில் இவர் முழுமையாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலுக்கு சுமார் ரூ.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமிதாப் பச்சன் இந்த படத்தில் அஷ்வத்தாமா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கும் இதில் நடிக்க சுமார் 20 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறதாம்.
வழக்கமாக தனது படங்களுக்கு சுமார் ரூ.150 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெருவார், பிரபாஸ். ஆனால், கல்கி படத்திற்காக சம்பளத்தை குறைத்து, ரூ.80 கோடியை சம்பளத்தொகையாக அவர் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.