Kamal Haasan: அமெரிக்கா சென்ற கமல்ஹாசன்..! எதற்காக தெரியுமா..?
ரசிகர்களால் ‘உலக நாயகன்’ என்று அன்புடன் அழைக்கப்படுபவர், கமல்ஹாசன். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது.
கமல், இளம் இயக்குநர்களுடன் சமீப காலமாக கைக்கோர்த்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்திருந்தார்.
அடுத்து ஹெச்.வினோத் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
கமல் அடுத்து பிராஜெக்ட் கே படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோருடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.
பிராஜெக்ட் கே படத்தின் விழா ஒன்று அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ நகரில் நடக்கிறது.
பிராஜெக்ட் கே விழாவில் கலந்து கொள்வதற்காக கமலும் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த புகைப்படத்தை பிராஜெக்ட் கே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.