கமல்ஹாசனின் புதிய அவதாரம்! வெளியான மாஸ் அப்டேட்!

Wed, 31 May 2023-2:18 pm,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படத்தின் மூலம் நடிகர் கமல்ஹாசன் கம்பேக் கொடுத்தார்.  இப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது.

 

தற்போது கமல்ஹாசன் ஹெச்.வினோத் இயக்கத்தில் 'கேஹெச்233' மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் 'கேஹெச்234' போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இப்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன்-2' படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிக்கும் பான் இந்திய படமான 'ப்ராஜெக்ட் கே'-ல் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

கமல் 'ப்ராஜெக்ட் கே' படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link