’ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்ரா..’ 13 வருடங்களுக்கு முன் இதே நாளில் சிங்கமாக சீரிய சூர்யா..!
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த படம் சிங்கம்.
13 வருடங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தில் பல பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றிருக்கும்.
பஞ்ச் வசங்களாலேயே இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
அதன் பிறகு இப்படத்தின் 2 மற்றும் 3 ஆம் பாகங்கள் வெளிவந்தன. இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தாலும் மூன்றாவது பாகம் சரியான வரவேற்பினை பெறவில்லை.
சிங்கம் முதல் பாகம் முதல் மூன்றாம் பாகம் வரை சிங்கமாக சீறி பாய்ந்திருப்பார் சூர்யா.
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் இந்த #13yearsofblockbustersingam என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சிங்கம் படம் போல ஒரு படம் எடுத்து ஹரி கம்-பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.