கத்ரினா கைப் - விக்கி கௌஷல் திருமண புகைப்படங்கள்!
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் இவர்கள் இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும், சில திரைப் பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஆடம்பரமாக நடந்த அந்தக் திருமணத்தில் கத்ரினாவிற்கு மெஹந்தி மட்டுமே ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது. சொஜட்(sojat) எனப்படும் பிரத்யேகமான மெஹந்தி அவருக்காக வரவழைக்கப்பட்டது. மேலும் அவர் அணிந்திருந்த லெஹங்காவும் பலவித வேலைபாடுகளுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
விக்கி கோஷல் கோட்டையில் ராஜாவின் அறையிலும், கத்ரினா ராணியின் அறையிலும் தங்கினர் என்று கூறப்படுகிறது.
மேலும் இவரது திருமணத்தில் ரூ.4 லட்ச மதிப்பில் இத்தாலியை சேர்ந்த சமையல் வல்லுநர் ஒருவர் செய்யப்பட்ட கேக்கும் வெட்டப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் பாலிவுட்டிலிருந்து தயாரிப்பாளர் கரண் ஜோஹர், இயக்குனர் பர்ஹா கான், நடிகர் அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.