உங்கள் இதயம் இதமாய் இருக்கும்: இந்த 5 விஷயங்களை கவனத்தில் கொண்டால் போதும்

Sat, 03 Dec 2022-6:48 pm,

நிபுணர்களின் அறிக்கையின்படி, வறுத்த உணவை சாப்பிடுவதால், நமது கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இந்த கொலஸ்ட்ரால் நமது இதயத்திற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். இவை இரத்த நாளங்களில் குவிந்து இரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்தும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே பொரித்த உணவுகளுக்குப் பதிலாக காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை ஆரோக்கியமாக்குகின்றன.

 

கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள் ஆனால் பல் ஆரோக்கியம் உங்கள் இதயத்துடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. பல் துலக்குவதன் மூலம் உங்கள் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றலாம். பாக்டீரியாக்கள் சரியான நேரத்தில் சுத்தம் செய்யப்படாவிட்டால், அவை வாய் வழியாக இரத்த ஓட்டத்தை அடையலாம். இதனால் இதய நோய்கள் ஏற்படலாம். நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

ஒரு ஆய்வின் படி, ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 7 மணி நேரம் தூங்குபவர்களுக்கு இந்த ஆபத்து குறைவு. அதாவது நாம் எவ்வளவு நன்றாக உறங்குகிறோமோ, அந்த அளவுக்கு நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இரவில் தாமதமாக தூங்குவதற்கு பதிலாக நன்றாக தூங்குவது மிக அவசியமாகும். இதனால் இதய ஆரோக்கியம் மற்றும் மனநலம் மேம்படும்.

அலுவலக வேலை செய்பவர்கள் பெரும்பாலும் நாற்காலியில் பல மணி நேரம் அமர்ந்திருப்பார்கள். இதனால் அவர்களது உடலில் பல இடங்களில் விறைப்பு ஏற்படுகிறது. இதனால், அவர்களின் ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட்டு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகையவர்கள் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், சுமார் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

சிகரெட் புகை உங்கள் இதயத்திற்கு மிகவும் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. ஒரு ஆய்வின் படி, சிகரெட் பிடிப்பவர்கள் அதிக இதய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புகைபிடிப்பவர்களின் இதய வயதும் குறைகிறது. அதிகமாக மது அருந்துவது இதய ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது. ஆகையால் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பது மிக அவசியமாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link