பச்சை நிற புடவையில் பச்சைக்கிளியாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
)
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது பலரது கனவு கன்னியாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியான மகாநதி படம் இவருக்கு சிறந்த அந்தஸ்தை பெற்று தந்தது. இப்படம் இவருக்கு பல விருதுகளை வாரி வழங்கியது
)
இதனை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்தார். சமீபத்தில் வெளியான 'அண்ணாத்தே' படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து தனது பன்முக திறமையை வெளிக்காட்டினார்
)
இதே போன்று சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் தனது நடிப்பு திறமையால் இன்றளவும் ஜொலித்து வருகிறார்
அவ்வப்போது விதவிதமாக பல்வேறு போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது ஹோம்லியாக பச்சை நிற புடவை அணிந்து, பச்சைக்கிளி போல் ரசிகர்கள் மனதை படபடக்க செய்துள்ளார். சமீபத்தில் அவரது நாயுடன் ஒரு பாட்டுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது