கீர்த்தி டூ அதிதி... நாயகிகளாக அவதாரமெடுத்த பிரபலமான வாரிசு நடிகைகள்!

Tue, 30 Aug 2022-7:52 am,

பிரபல நடிகர் சரத்குமாரை வாரிசான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக 'போடா போடி' படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமானார்.  தற்போது இவர் பிற மொழிகளிலும் நடிக்கிறார், இவரது வில்லி கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 

தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகா ஆகியோரின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது திரையுலகை கலக்கி கொண்டிருக்கிறார்.

 

 

உலகநாயன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழி சூர்யாவுக்கு ஜோடியாக '7ஆம் அறிவு' படத்தின் கதாநாயகிரியாக அறிமுகமானார்.  இவர் நடிப்பது, பாடுவது, இசையமைப்பது என பல திறமைகளை கொண்டுள்ளார்.  அடுத்ததாக இவரது தங்கை அக்ஷரா ஹாசனும் சினிமா துறைக்குள் வந்துவிட்டார்.

 

பிரபல நடிகையான ராதாவின் மகள்களான மூத்த மகள் கார்த்திகா தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக 'கோ' படத்தின் மூலமும், அவரது இளைய மகள் துளசி தமிழில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக 'கடல்' படத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமானார்கள்.

 

ஆக்ஷன் கிங் என்று புகழப்படும் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக 'பட்டத்து யானை' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

 

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா ரவிச்சந்திரன் தமிழில் முதன்முதலாக சசிகுமாருக்கு ஜோடியாக 'பலே வெள்ளையத்தேவா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், அதன்பின்னர் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார்.

 

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழில் 'தும்பா' படத்தின் மோளம் கதாநாயகியாக அறிமுகமானார்.

 

இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகளான நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழ் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்த 'மாநாடு' படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

தமிழ் சினிமாவிற்கு புது வரவாக வந்திருக்கும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்திருக்கிறார்.  விரைவில் பலரின் கவனங்களை ஈர்த்த இவர் சிவகார்த்திகேயனுடன் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link