Kidney Stone : சிறுநீரக கல் பாதிப்பு...எதை சாப்பிடலாம்?எதை சாப்பிட கூடாது?
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 10ல் ஒருவருக்கு சிறுநீரக கல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 30ல் இருந்து 40 வயதிற்குள் இருக்கும் ஆண்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இவர்கள் எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட கூடாது என்பது குறித்து பார்க்கலாம்!
சிட்ரஸ் பழங்கள்:
எலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப் பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் சேர்த்து கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடித்து, பழச்சாறு குடித்து உடலை பார்த்துக்கொள்ள வேண்டும்.
சாப்பிடக்கூடாத உணவுகள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக துரித உணவுகளை தொடவே கூடாது.
வைட்டமின் சி:
வைட்டமின் சி அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். இது, சிறுநீரக கல் வளர உதவும்.
இரைச்சி வகை புரதம்:
சிறுநீரக கல் இருப்பவர்கள், animal protien எனும் இரைச்சி வகை புரதங்களை எடுத்துக்கொள்வதை நிறுத்தவும்.
உப்பு:
உப்பு பயன்பாட்டை உணவில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். இது, சிறுநீரில் கால்சியம் அதிகமாக காரணமாய் இருப்பதால் உப்பை குறைத்து கொள்ள வேண்டும்.
ஹை ஆக்ஸ்டேல் உணவுகள்:
கடலை, உருளை கிழங்கு, சாக்லேட், பீட்ரூட் உள்ளிட்ட உணவுகள் சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு காரணமாக இருக்கலாம். எனவே, இதை தவிர்க்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)