KKR, பஞ்சாப் குறிவைக்கும் 6 வீரர்கள்...!

Thu, 10 Feb 2022-6:44 pm,

மார்ட்டின் குப்டில்: 20 ஓவர் போட்டிகளில் வெளுத்து வாங்கும் மார்டின் கப்தில், ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர். இந்தமுறை பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை ஏலம் எடுக்கலாம். 

ஜானி பேர்ஸ்டோவ்: விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேரிஸ்டோவ். இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவரை கொல்கத்தா அணி ஏலம் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் அவர், ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்களை விளாசியுள்ளார்.

இஷான் கிஷன்: இஷான் கிஷனுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மற்றும் கொல்கத்தா என இரு அணிகளும் இஷான் கிஷனை ஏலம் எடுக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த அணிகளைத் தவிர வேறு சில அணிகளும் இஷான் கிஷனை ஏலம் எடுக்க முயற்சி செய்யும். விக்கெட் கீப்பர் மற்றும் இடது கை அதிரடி வீரர் என்பதால் இவருக்கு அதிகப்படியான மவுசு இருக்கிறது.

பாஃப் டு பிளெசிஸ்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்த பாப் டூபிளசிஸ், இந்த முறை ஏலப்பட்டியலுக்கு வந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 400 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணி அவரை மீண்டும் எடுக்க முயற்சி செய்தாலும், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளும் இவரை ஏலம் எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

ஷிகர் தவான்: ஐபிஎல் போட்டிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். இடது கை பேட்ஸ்மேனான இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1726 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களும் அடங்கும். கொல்கத்தா அணிக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. 

கிறிஸ்லின்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ் லின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகாக விளையாடினார். பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதிரடி ஆட்டக்காரரான அவரை பஞ்சாப் அணி ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link