ரோகித் சர்மா இருக்கும் வரை இனி இந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கேஎல் ராகுலுக்கும் இடையே பனிப்போர் ஓடிக் கொண்டிருக்கிறது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை வரை இந்திய அணியில் தட்டுத்தடுமாறி இடம்பிடித்துக் கொண்டிருந்த கே.எல் ராகுல் அதன்பிறகு முழுமையாக ஓரங்கட்டப்பட்டார்.
அவருக்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு கொடுப்பதே இல்லை. ரிஷப் பந்துக்கு மட்டுமே இந்திய அணியில் முழு முன்னுரிமை கொடுக்கிறார். கடந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குக்கூட கேஎல் ராகுலை ரோகித் சர்மா தேர்வு செய்யவில்லை.
இது குறித்து பேசிய கேஎல் ராகுல், இந்திய அணியில் இருக்கும் அரசியல் நிஜ அரசியலை விட பெரியது. அதனை முழுமையாக எல்லாம் வெளிப்படையாக பேச முடியாது என கூறியிருந்தார். அதாவது கடந்த ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருந்தபோது இதனை கூறியிருந்தார்.
அப்போதே அவருக்கு தெரிந்துவிட்டது, டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணயில் இடம்பெற மாட்டோம் என்று. இருப்பினும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர் தான் இப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
அவர் வந்தபிறகு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் பெயரை இடம்பெற செய்கிறார். இருப்பினும் அந்த வாய்ப்புகளை ராகுல் வீணடித்துவிடுவதால், உடனே இந்திய அணியில் இருந்து தூக்கியடிக்கப்படுகிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ராகுல் இடம்பிடித்திருந்தார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவருடைய பேட்டிங் சரியில்லை என்றவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உடனடியாக பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
இதனால் அதிருப்தியின் உச்சத்தில் இருக்கிறார் கே.எல்.ராகுல். ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பில்லை என ராகுலே தெரிந்து வைத்திருக்கிறார்.
ரோகித் சர்மாவுக்கு ராகுல் மீது என்ன கோபம் என தெரியவில்லை. அவரை விட ரிஷப் பந்துக்கே முக்கியத்துவம் கொடுத்து இந்திய அணியில் சேர்க்கிறார். கேஎல் ராகுலும் தனக்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.