கலக்கத்தில் கேஎல் ராகுல்! காரணம் சர்ஃபராஸ் கான் தான்! ஏன் தெரியுமா?
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பிளேயிங் 11ல் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதில் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இரானி கோப்பையில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார் சர்ஃபராஸ் கான்.
பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேஎல் ராகுல் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. இருப்பினும் 2வது டெஸ்டில் அரை சதம் அடித்து இருந்தார்.
கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்தார் சர்ஃபராஸ் கான். முதல் தொடரிலேயே சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து அசத்திய சர்ஃபராஸ் கான் கடைசி வரை அவுட் ஆகாமல் 222 ரன்கள் அடித்து இருந்தார்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடாத பட்சத்தில் ஆஸ்திரேலியா தொடரில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.