லேபக்ஷி கோவில்: விஞ்ஞானிகளையும் வியக்க வைக்கும் அந்தரத்தில் தொங்கும் தூண்
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்த கோயிலின் பெயர் லேபக்ஷி கோயில். விஜயநகர பேரரசின் கட்டுமானக் கலைக்கு ஒரு அழகிய எடுத்துக்காட்டு இந்தக் கோவில். இந்த கோவிலின் ஓவ்வொரு சிற்பத்திலும், தூண்களிலும், பிரமிக்கவைக்கும் நுண்ணிய வேலைப்பாடுகள் மிளிர்கிறது. இது 'தொங்கும் தூண் உள்ள கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் மொத்தம் 70 தூண்கள் உள்ளன. அவற்றில் ஒரு தூண் தரையை தொடாமல் காற்றில் தொங்குகிறது.
கோயிலுக்கு வந்த ஒரு பிரிட்டிஷ் பொறியியலாளர் இந்த தூண் எவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள அதை அசைத்தார், அப்போது அந்த தூண் காற்றில் ஊசலாடுவதைப் பாத்து வியப்பில் ஆழ்ந்தார்.
சிவபெருமானின் வடிவமான விராபத்ரா இங்கு வணக்கப்படும் முக்கிய தெய்வம். இது தவிர, சிவபெருமானின் பிற வடிவங்களான அர்த்தநரிஷ்வரர், தட்சிணமூர்த்தி போன்ற வடிவங்களையும் காணலாம். இங்கு வீற்றிருக்கும் அன்னை பத்ரகாளி என்று அழைக்கப்படுகிறார்.
குர்மசேலம் மலையில் கட்டப்பட்ட இந்த கோயில் ஆமை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னருடன் பணிபுரிந்த விருப்பண்ணா மற்றும் விரண்ணா என்ற இரண்டு சகோதரர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த கோயில் அகஸ்திய முனிவரால் கட்டப்பட்டது என்று ஒரு புராண நம்பிக்கையும் உள்ளது.
இந்த கோயில் ராமாயணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதே இடத்தில் தான் ஜாடாயு ராவணனுடன் சண்டையிட்டு காயமடைந்தார். ராமரிடம் ராவணன் இருக்கும் இடம் பற்றிய தகவல் அளித்தார். இந்த கோவிலில் ஒரு பெரிய தடம் உள்ளது, இது திரேதா யுகத்திற்கு சாட்சியாக நம்பப்படுகிறது. சிலர் இதை ராமரின் தடம் என்று கருதுகின்றனர், சிலர் இதை தாய் சீதாவின் தடம் என்று கருதுகின்றனர்.
இந்த கோவிலுக்கு வரும் பலர், இந்த தூணுக்கு அடியில் துணிகளை நுழைத்து பார்க்கின்றனர்.