வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்ப்பது எப்படி...!!
www.nvsp.in என்ற தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலுக்கு சென்று போர்ட்டலின் மேல் இடது மூலையில், ‘வாக்காளர் பட்டியலில் தேடு’ (Search in electoral roll) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் https://electoralsearch.in/) என்ற பக்கத்திற்கு செல்லலாம்.
நீங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டும் தேடலாம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் (Electors Photo Identity Card) மூலம் மேற்கொள்ளும் தேடலைத் தேர்வு செய்யலாம்.
EPIC எண் மூலம் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என தேட, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் வழங்கப்பட்ட எண்ணை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.
இந்த வலைதளத்தில், நீங்கள் பூத் நிலை அதிகாரி (BLO), வாக்காளர் பட்டியல் அதிகாரி (ERO) மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் யார் என்பது போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
தமிழக தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இதுதொடர்பான மேலும் தகவல்களை பெறலாம். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் படிவம் எண் 6-ஐ சமர்பிக்க வேண்டும். Voter Helpline App என்ற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.