RULE 72 : பணத்தை இரட்டிப்பாக்கி கோடீஸ்வரர் ஆக்கும் விதி 72 என்னும் சூத்திரம்
குறைந்த வட்டி விகிதத்திலும், வட்டியை இரட்டிப்பாக்கலாம். அதற்கு நீங்கள் உங்கள் முதலீட்டை புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும். அதற்கு நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்யவேண்டும் என்பதோடு, கூட்டு வட்டியை தேர்ந்தெடுப்பதன் மூலம் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். நீண்ட காலத்திற்கான முதலீட்டில் கூட்டு வட்டி சிறந்த பலனைக் கொடுக்கும்.
நீங்கள் 1000 ரூபாயை எங்காவது டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வருடம் கழித்து உங்களிடம் 1100 ரூபாய் இருக்கும். அதை கூட்டு வட்டி முறையில், வட்டியும் அசலும் சேர்ந்த்ஃஅ 1,100 ரூபாயை முதலீடாக்கும் போது அடுத்த ஆண்டு, உங்கள் பணம் ரூ.1210 ஆக உயரும். இதே போன்று, ஒவ்வொரு ஆண்டும், அசலோடு வட்டியும் சேர்ந்து அடுத்த ஆண்டுகான முதலீடு என உங்கள் பணம் இரட்டிப்பாவதைக் காண்பீர்கள்.
உங்கள் சேமிப்பு எப்போது இரட்டிப்பாகும் என்பதைக் கணக்கிடுவதற்கான பொதுவான விதி ஒன்று மிகவும் பிரபலமானது. அது விதி 72 (RULE 72) ஆகும். இது நிதித் துறையில் நிறையப் பயன்படுத்தப்படுகிறது. விதி 72 மூலம், உங்கள் முதலீட்டு பணம் எவ்வளவு காலத்தில் இரட்டிப்பாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் 10 சதவிகித கூட்டு வட்டி என்ற வகையில் 1000 ரூபாயை நீங்கள் முதலீடு செய்தால், விதி 72 இன் படி, இந்த முதலீட்டை இரட்டிப்பாக்க 72/10 = 7.2 ஆண்டுகள் ஆகும். இதை விட பெரிய தொகையை நீங்கள் முதலீடு செய்தால், அது 7 ஆண்டுகளுக்குப் பிறகு 2 மடங்காக அதிகரிக்கும்.
சேமிக்கும் பழக்கத்தை நாம் இளம் வயதிலேயே தொடங்க வேண்டும். நீங்கள் 25 வயதிலிருந்து 5,000 ரூபாய் முதலீடு செய்யத் தொடங்கினால். இதன் மூலம் உங்களுக்கு 10 சதவீத வருடாந்திர வருவாய் கிடைக்கும் போது, 60 வயதில், உங்களிடம் 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருக்கும்.
பரஸ்பர நிதிகள் நீண்ட கால முதலீட்டில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தைப் கொடுக்கின்றன. எனவே, ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகை SIP முறையில் முதலீட்டை தொடங்குவது விவேகமானது. SIP குறைவான பணமாக இருக்கலாம். ஆனால் வரும் காலத்தில் ஒரு நல்ல தொகையை உங்களுக்கு கொடுக்கும் என்பது உறுதி.