கல்லீரல் முதல் இதயம் வரை எல்லாம் பக்காவாக இருக்க... பப்பாளி விதையை இப்படி யூஸ் பண்ணுங்க
பப்பாளியில் உள்ள பாப்பேன் என்ற என்சைம் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குவதோடு, பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. பப்பாளியில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
பப்பாளி மட்டுமின்றி, பப்பாளி விதைகளும் (Papaya Seeds Benefits) நோய்களைத் தடுக்க உதவுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? பப்பாளி விதை உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரையில் பல பிரச்சனைகளை மிக எளிதாக கட்டுப்படுத்த உதவும் என்பது பலருக்கு தெரியாது.
கல்லீரல் ஆரோக்கியம்: பப்பாளி விதைகளில் உள்ள பல மருத்துவ குணங்கள் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்குகின்றன. பப்பாளி விதைகள் கல்லீரலில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கின்றன. இதன் காரணமாக கல்லீரலின் புதிய செல்கள் உருவாக உதவுகிறது.
உடல் பருமன்: பப்பாளி விதையில் உள்ள நார்ச்சத்து உடல் பருமனை வேகமாக குறைக்க உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.
குடல் ஆரோக்கியம்: பப்பாளி விதையில் கார்பீன் என்ற தனிமம் உள்ளது. இவை குடலில் உள்ள புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கொலஸ்ட்ரால்: பப்பாளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதன் காரணமாக, கொலஸ்ட்ராலை எரித்து, மாரடைப்பு அபாயத்தை தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மலச்சிக்கல்: நார் சத்து மிக்க பப்பாளி விதையில் இருக்கும் மலமிளக்கி பண்புகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன. இது தவிர, பப்பாளி விதையில் உள்ள பாப்பைன் எனும் கரையும் நார்ச்சத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகின்றன
பப்பாளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதன் காரணமாக, சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும். செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால், கணையத்தின் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது.
பப்பாளி விதைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் மூட்டுவலிக்கு அருமருந்தாகும். வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும். இதில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பல சேர்மங்கள் உள்ளன.
பப்பாளி விதைகளை உட்கொள்ள, அதன் விதைகளை பொடி செய்து வைத்துக் கொண்டு அதனை ஸ்மூத்தி, ஜூஸ், கஞ்சி போன்றவற்றில் கலந்து சாப்பிடலாம். சிறிதளவு பொடித்த பப்பாளி விதைகளை காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.