WhatsApp chat லீக் ஆகாமல் பாதுகாப்பது எப்படி..!!!

Tue, 20 Oct 2020-7:26 pm,

வாட்ஸ்அப் அதன் தளத்தை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு தொடர்பான ஆப்ஷனை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. வாட்ஸ்அப் ஆதண்டிகேஷன் என்பது மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அம்சமாகும். இந்த அம்சம் இரண்டு காரணி அங்கீகார குறியீடு (two-factor authentication code)  என்று அழைக்கப்படுகிறது. இதன் உதவியுடன், உங்கள் வாட்ஸ்அப்பில் 6 இலக்கக் குறியீட்டை உள்ளிடலாம். இந்த குறியீட்டின் காரணமாக, எந்த ஹேக்கரும் உங்கள் வாட்ஸ்அப்பை குளோன் செய்ய முடியாது. ஹேக்கர் வாட்ஸ்அப்பை குளோன் செய்ய முயற்சித்தால், அதற்கு அங்கீகார குறியீடு தேவைப்படும், அந்த குறியீடு இல்லாமல் வாட்ஸ்அப்பில் உள்ள தகவல்களை திருட முடியாது.

வாட்ஸ்அப்பில் சாட் தகவல்களை பேக் அப் செய்து பாதுகாக்கும் அம்சம் உள்ளது. இதன் மூலம், Google Drive, iCloud  அல்லது e-mail வாட்ஸ் அப் அரட்டையின் பிரதியை பாதுகாப்பு வைத்திருக்கும் பழக்கம்  வைத்திருக்கும் நபர்கள் பலர் உள்ளனர் . ஆனால் இந்த அம்சம் வாட்ஸ்அப் சாட் தகவல் லீக் ஆக முக்கிய காரணமாக இருக்கலாம். இதனால் end to end encryption என்ற பாதுகாப்பு அம்சம் பயனில்லாமல் போகும். அதாவது, இரண்டு பயனர்களிடையே மட்டுமே உள்ள சாட் விபரங்கள் வேறொரு இடத்திலும் சேமிக்கப்படும் போது, இந்த பாதுகாப்பு அம்சம் வேலை செய்யாது.

 

உங்கள் வாட்ஸ்அப்பை மின்னஞ்சல் ஐடியுடன் இணைத்து, அந்த மின்னஞ்சல் ஐடியின் உதவியுடன் மீண்டும் வாட்ஸ்அப் சாட் விபரங்களை மீட்டெடுக்கலாம். உங்களது நீக்கப்பட்ட வாட்ஸ்அப் அரட்டையை வேறு ஒருவர் பெற முடியாது. ஏனென்றால் அவரிடம் உங்கள் மின்னஞ்சல் இருக்காது. ஆனால் உங்கள் மின்னஞ்சல் ஐடி இருந்தால், ஹேக்கிங் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

உங்கள் தொலைபேசியிலிருந்து செய்யப்படும் வாட்ஸ்அப் அரட்டை, அதாவது சாட் விபரங்களை நீக்க விரும்பும் அதே நேரத்தில்,  ஆனால் புகைப்படங்கள் அல்லது பிற முக்கியமான தகவல்களை சேமிக்க விரும்பினால், நீங்கள் சாட் தகவல்கள், வீடியோ, புகைப்படங்களை, பென் டிரைவ், ஹார்ட் டிரைவ், மைக்ரோ எஸ்.டி கார்டு மற்றும் மெமரி கார்டுக்கு மாற்றலாம்.

வாட்ஸ் அப் அரட்டை விபரங்கள் கசியாமல் இருக்க மேற்சொன்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு, உங்கள் தகவல்கள் கசியாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link