SIM Swap மோசடி மூலம் உங்கள் கணக்கில் உள்ள பணம் காலியாகலாம்.. PNB எச்சரிக்கை..!!!
)
சைபர் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் வாடிக்கையாளருக்கு ஒரு மெயில் அல்லது SMS செய்தியை அனுப்புகிறார்கள். அந்த செய்தியில் உள்ள இணைப்பை நீங்கள் கிளிக் செய்தால், அதன் மூலம் அவர்கள் உங்கள் தொலைபேசி அல்லது கணினியிலிருந்து உங்கள் தனிப்பட்ட தரவை எளிதில் திருடலாம். இதன் மூலம் மோசடி நடத்தப்படுகிறது.
)
அண்மைய காலங்களில் SIM Swap மூலம் மோசடி செய்ததாக பல வழக்குகள் வந்துள்ளன என்று வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் மொபைல் எண் சேவை இல்லை அல்லது வரம்பிற்கு வெளியே அதாவது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறது என்று தகவல் வந்தால், உடனடியாக இது குறித்த தகவல்களை அவர்களின் மொபைல் சேவை வழங்குநரிடமிருந்து பெறுங்கள் என்று வங்கி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. சிம் இடமாற்றம் மூலம், சைபர் மோசடி செய்பவர்கள், வாடிக்கையாளரின் மொபைலின் சிம் ஆஃப் செய்து புதிய சிம் ஒன்றை பெற்றுக் கொள்கிறார்கள், இதன் மூலம் உங்கள் மொபைலுக்கு அனுப்படும் அனைத்து ஓடிபி அல்லது பிற முக்கிய தகவல்கள் அனைத்தும் அவர்களுக்கு சென்று விடு. நீங்கள் மோசடியை கண்டு பிடிப்பதற்கும் பணம் கணக்கில் காலியாகி இருக்கும்.
)
SMS அல்ர்ட் தகவல்களை பெற உங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்யுமாறு வாடிக்கையாளர்களை வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வசதி மூலம், உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களும் உங்களுக்கு அனுப்பப்படும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்டை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும் எனவும் வங்கி கேட்டுள்ளது. இதனால், மோசடி ஏதேனும் நடந்தால், குறித்த நீங்கள் விரைவில் தகவல் அளிக்கலாம்
மோசடி நடந்ததாக நீங்கள் சந்தேகித்தால் அல்லது நீங்கள் செய்யாத ஒரு பரிவர்த்தனை தொடர்பாக உங்கள் கணக்கில் பணம் எடுக்கப்பட்டதாக நீங்கள் எப்போதாவது உணர்ந்தால், உடனடியாக அதை உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும். வங்கியின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, சி.வி.வி, பின் எண், ஓ.டி.பி மற்றும் வங்கி தொடர்பான வேறு எந்த முக்கியமான தகவலையும் வேறு யாருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.