WhatsApp-ல் வந்துள்ள அசத்தல் அம்சங்களை பயன்படுத்துவது எப்படி..!!!
)
வாட்ஸ்அப் மூலம், நீங்கள் Whatsapp payment அம்சம் மூலம் நீங்கள் பணம் செலுத்த முடியும். National Payments Corporation of India சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப்பிற்கு கட்டணச் சேவையைத் வழங்க அனுமதித்துள்ளது. பயனர்கள் உடனடியாக வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப முடியும். இந்நிறுவனம் இதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் கட்டண பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். சில பயனரின் வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே கட்டணம் செலுத்துவதற்கான ஆப்ஷன் உள்ளது. அது இல்லை என்றால், நீங்கள் வாட்ஸ்அப்பைப் அப்டேட் செய்வதன் மூலம் அதைப் பெறலாம். இதற்கு UPI ஐ ஆதரிக்கும் டெபிட் கார்டு இருப்பது அவசியம். வாட்ஸ்அப் பேமென்ட் விருப்பத்திற்குச் சென்று வங்கியைத் தேர்ந்தெடுத்து விவரங்களை உள்ளிட்டு அதை பயன்படுத்தலாம் NPCI, யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸை (UPI) இயக்குகிறது. இது இரண்டு மொபைல் போன்கள் இடையில், உடனடியாக பணம் செலுத்த அனுமதிக்கிறது. இதன் மூலம் எந்த தனி நபர் அல்லது கடைக்காரருக்கு நீங்கள் வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பலாம்.
)
வாட்ஸ்அப்பில், பலர் தேவையில்லாமல் குட் மார்னிங் மற்றும் குட் நைட் என்ற பெயரில் நிறைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் அனுப்புகிறார்கள். நாள் முழுவதும், குறைந்தது சில செய்திகளாவது வந்து உங்கள் சேமிப்பிடம் காலியாகிவிடும் நிரப்பப்படுகின்றன. ஆனால் இப்போது இதுபோன்ற தேவையற்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களால் சேமிப்பு தீர்ந்து போவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு புதிய அம்சம் வந்துவிட்டது. இந்த புதிய ஸ்டோரெஜ் மேனேஜ்மெண்ட் டூல் உதவியுடன், உங்கள் தொலைபேசியிலிருந்து உங்களுக்குத் தேவையில்லாத கோப்புகளை எந்த இடையூறும் இல்லாமல் நீக்கலாம். ஒரே நேரத்தில் அனைத்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் நீக்க இந்த டூல் மிகவும் உதவியாக இருக்கும்.
வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் மெசேஜ்களை 7 நாட்கள் நீங்கள் படிக்கவில்லை என்றால், அது தானாகவே மறைந்து விடும். தனிப்பட்ட செய்தி மற்றும் க்ரூப் ஆகிய இரண்டு வகைகளிலும் நீங்கள் இதை பயன்படுத்தலாம். இதில் வாட்சப் ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனில் இருந்தால், வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளில் உள்ள புகைப்படங்கள் தனாகவே டவுன் லோடு ஆகும். ஆனால் செய்திகள் மறைந்து விடும்.
வாட்ஸ்அப், உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு ஒரு சேட்டை என்றென்றும் ம்யூட் செய்யும் அம்சத்தை கொடுத்துள்ளது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்பை வாட்ஸ்அப் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பின் வலை பதிப்பிற்கும் கிடைக்கும் என்பதை செய்தி தளம் உறுதிப்படுத்தியுள்ளது. விருப்பாம் இல்லாத க்ரூப் மற்றும் காண்டாக்ட் அனுப்பும் மெசேஜ்களை நிரந்திரமாக ம்யூட் செய்து நிம்மதியாக இருக்கலாம்.
வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த அற்புத அம்சங்களை பயன்படுத்தி, பயனர்கள் பயனடையுங்கள்.