LPG கேஸ் சிலிண்டர் வெறும் 450 ரூபாய்க்கு கிடைக்கிறது! விண்ணப்பிக்க தேவையான தகுதி
மலிவு விலையில் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய மத்திய அரசு வாய்ப்பு அளித்து வருகிறது. இந்தத் திட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி அரசால் தொடங்கப்பட்டது.
450 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர் யாருக்கு கிடைக்கும்? மத்தியப் பிரதேச அரசின் கூற்றுப்படி, உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகள், எல்பிஜி இணைப்பு உள்ள பெண்கள் மற்றும் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் குறைந்த விலையில், அதாவது 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறலாம்
மத்தியப்பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல்
இது குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவை எல்பிஜி சமையலறை சிலிண்டரின் விலையை ரூ.200 குறைப்பதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான எம்பி அமைச்சரவை இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு 200 ரூபாயை குறைத்தது
மத்திய அரசு சமீபத்தில் எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது. முன்னதாக நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1100 ஆக இருந்தது. இப்போது நீங்கள் அதே சிலிண்டரை சுமார் 900 ரூபாய்க்கு பெறுகிறீர்கள்.
லாட்லி பெஹன் யோஜனாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்
450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர் பெற, விண்ணப்பதாரர்கள் லாட்லி பெஹன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.
லட்லி பெஹன் யோஜனாவுக்கான விண்ணப்பங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகம், ஆங்கன்வாடி அலுவலகம் அல்லது முகாம் அலுவலகம் ஆகியவற்றில் கிடைக்கும். அங்கு, குறைந்த விலையில் சிலிண்டர் பெற, விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்கனவே குறைந்துள்ள நிலையில், மாநில அரசு திட்டங்களின் பயனாளிக்கு மேலும் குறைந்த விலையில் கிடைக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் மற்றும் மாநில தேர்தல்களை மனதில் வைத்து இந்தத் திட்டங்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது