₹5000 விலையில் கிடைக்கும் சிறந்த அம்சங்கள் கொண்ட 4G ஸ்மார்ட்போன்கள்...!!!

Thu, 22 Oct 2020-3:14 pm,

இந்தியாவில், நோக்கியா 4G  அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை ரூ.5000 க்கும் குறைவான பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன. Nokia 215 4G  விலை 2949 ரூபாய். இது கருப்பு, பச்சை வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கும். அதே நேரத்தில், Nokia 225 4G  விலை 3499 ரூபாய். இது கருப்பு, கிளாசிக் நீலம் மற்றும் மெட்டாலிக் சாண்ட்  வண்ணத்தில் கிடைக்கிறது. இரண்டு தொலைபேசிகளிலும் இரட்டை நானோ சிம் வசதி உள்ளது.

Nokia தொலைபேசிகளில்  4G VoLTE காலிங் மற்றும் டெடிகேடட் ஃப்ங்ஷன் பட்டன்கள் உள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 நாட்கள் நீடிக்கும் திறன் கொண்டது. இரண்டும் RTOS அடிப்படையிலான சீரிஸ் 30+ OS இல் வேலை செய்கின்றன. மேலும் அவை 2.4 அங்குல QVGA டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. தொலைபேசியில் 128MB ஆன்போர்ட் ஸ்டேரேஜ்  உள்ளது. 32 ஜிபி வரை சேமிக்கும் இடத்தை அதிகரிக்க முடியும்.

 

இணைப்பிற்காக, 4G VoLTE, புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஜாக் வழங்கப்பட்டுள்ளன. முன்பே நிறுவப்பட்ட எம்பி 3 பிளேயரும் தொலைபேசியில் கிடைக்கிறது. இரண்டிலும் 1150mAh  நீக்கக்கூடிய பேட்டரி உள்ளது. இரண்டு தொலைபேசிகளையும் அக்டோபர் 23 முதல் நோக்கியா இந்தியா ஆன்லைன் ஸ்டோரிலிருந்து வாங்க முடியும். நவம்பர் 6 முதல் தொலைபேசிகளும் ஆஃப்லைனில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 5.45 அங்குல எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. 3000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது பின்புற கேமரா ஒன்றும் உள்ளது, இது 8 எம்.பி. மற்றும் 5 எம்.பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் உள்ள இந்த தொலைபேசியில் ஒரு பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. ஃபேஸ் அன்லாக், ஸ்லோ மோஷன், பெனோராமிக், நைட் மோட், டைம் லேப்ஸ், பர்ஸ்ட் மோட், கியூஆர் கோட், பியூட்டி போன்ற அம்சங்கள் இதிலுள்ள கேமராவில் கிடைக்கின்றன. இந்த போனில் 5.45 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 3000 mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. தொலைபேசியை ஈ-காமர்ஸ் தளமான உடானிலிருந்து வாங்கலாம்.

இந்திய மொபைல் தொலைபேசி பிராண்டான லாவா, நவம்பர் மாதத்தில் தீபாவளிக்கு முன்பு 4-5 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுடன் பண்டிகை கால விற்பனையை அதிகரிக்க  லாவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தேவையை கருத்தில் கொண்டு, 6000 க்கும் 8000 க்கும் இடையிலும், 8000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலையிலும் என பல வகையான தொலைபேசிகளை அறிமுகப்படுத்த லாவா திட்டமிட்டுள்ளது. இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த தொலைபேசிகள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஜியோனி புதிய ஸ்மார்ட்போன் ஆன, ஜியோனி எஃப் 8 நியோவை (Gionee F8 Neo) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் விலை 5499 ரூபாய். இந்த போன் நீலம், கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதில் ஆக்டாகோர் ப்ராசஸர் உள்ளது 2 GB -32 GB RAM அம்சத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம், சேமிக்கும் இடத்தை 256 GB வரை நீட்டிக்க முடியும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link