Melanistic Fox: சமூக வலைதளங்களில் வைரலாகும் அரிய வகை விலங்கு

Sat, 08 Jan 2022-7:44 am,

இந்த அரிய வகை நரிகள், கிராஸ் ஃபாக்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இந்த விலங்கு கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் உள்ளன. நரியின் உடலில் இருக்கும் ரோமங்கள் பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். இந்த நரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வட அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு இந்த நரிகள் பரிச்சியமானவை.  இங்கு ஏராளமாக காணப்படும் இந்த அழகான நரி வகை, ஒரு மில்லினிஸ்டிக் மாறுபாடு என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் உடலில் ஒரு விதமான ஆரஞ்சு நிறம் கலந்துள்ளது, அதில் கருப்பு நிற ரோமங்கள் கலந்திருக்கும். கனடாவின் நரிகளில் சுமார் 30% சிவப்பு நரிகள் உள்ளன. பார்ப்பதற்கு சிறப்பானதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.

2018 இல், ஒரு புகைப்படக்காரர் தனது கேமராவில் முதல் முறையாக மிலானிஸ்டிக் நரியை படம் பிடித்தார். மிகவும் கடின முயற்சிக்குப் பிறகே, இந்த படங்கள் கிடைத்ததாக புகைப்படக் கலைஞர் சாம் கேபி கூறியதாக mymodernmet.com வலைதளம் குறிப்பிட்டுள்ளது.  

வனவிலங்குக்கு இடையூறு செய்யாமல், புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்பதற்காக, கடின முயற்சிகளை எடுப்பது ஒருபுறம் என்றால், விலங்குகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று நம்பிக்கை ஏற்படும்படி நடந்துக் கொள்ல வேண்டும்.  கேமராவைத் தயார்படுத்துவதற்குள் விலங்கு ஓடிவிடும். நீண்ட காத்திருப்புக்கு கிடைத்த நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

புகைப்படக் கலைஞர் சாம் கேபி தனது முயற்சியை கைவிடவில்லை, சூரிய அஸ்தமனத்திற்கு முன் நரி புகைப்படக்காரரின் அருகில் ஓய்வெடுத்தது. சுமார் இரண்டு மாத காலத்திற்குப் பிறகு, கேபி நல்ல படங்களுடன் திரும்பினார்.

(புகைப்பட உதவி- Sam Gaby)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link