அறிவையும் செல்வத்தையும் அள்ளித் தரும் குரு மகாதிசை! பலன்களும் பரிகாரங்களும்!

Tue, 28 Mar 2023-6:33 pm,

நவகிரகங்களில் சுப கிரகமாக இருப்பவர் குரு பகவான். இவர் தனுசு, மீனம் ராசிகளுக்கு அதிபதி. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாகவும் இருக்கிறார். குரு மகாதிசை என்பது 16 ஆண்டுகள் நீடிக்கும். இந்த காலத்தில் பக்தி உணர்வு அதிகரித்து ஆன்மிகத்தில் ஈடுபட குரு அருள் புரிவார். நீதி தவறாமல் நேர்மையாக செயல்பட வைப்பதோடு, செல்வ வளத்தை அள்ளித் தருவார்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு சுப நிலையில் இருந்தால், அவரது அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கிறது. தேவகுரு செல்வம், ஆடம்பரம் மற்றும் வசதிகளை அளிப்பவர். ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் உள்ளவர்கள் அறிவு மிக்கவர்களாகவும் உயர்கல்வி கற்பவர்களாகவும் இருக்கிறார்கள். 

 

குருவின் பகை கிரகங்களான சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்கள் ஆளக்கூடிய ராசிகளுக்கு பெரியளவில் யோக பலன்கள் இருக்காது. அந்த வகையில், ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி, மகரம், கும்பம் லக்னம் உள்ளவர்களுக்கு குரு மகா திசை நடக்கும் போது, பெரிய அளவில் யோக பலன்கள் இருக்காது. 

குரு நல்ல பலன்களைத் தராவிட்டாலும், பெரியளவில் எந்த ஒரு கெடு பலனையும் தரமாட்டார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் சில பரிகாரங்களின் மூலம் யோக பலன்களை அதிகரிக்கலாம்.

 

ஒருவரின் ஜாதகத்தில் குரு பலவீனமான அல்லது அசுபமான நிலையில் இருந்தால், அதனை பலப்படுத்த வியாழக்கிழமை விரதம் அனுஷ்டிக்கலாம். வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை ஊற வைத்து மாலையாக கோர்த்து சமர்பிக்க வேண்டும்.

 

விஷ்ணுவை வழிபட்டாலும் குரு பலம் பெறுகிறார். வாழை மரத்தில் வியாழன் அன்று மஞ்சள், வெல்லம் மற்றும் உளுத்தம் பருப்பு படைத்து வழிபடவும். வியாழன் அன்று ஏழை எளியவர்களுக்கு உளுத்தம்பருப்பு, வாழைப்பழம், மஞ்சள், இனிப்புகளை தானம் செய்வதும் குருவை வலுப்படுத்துகிறது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link