Brain Health: மூளையின் செயல் திறனை பாதிக்கும் சில உணவுகள்

Thu, 30 Jun 2022-9:25 pm,

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன. பிரெட் மற்றும் பாஸ்தா போன்றவை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளின் வகையின் கீழ் வருகின்றன.

அதிக நைட்ரேட் உள்ள உணவு மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சேதப்படுத்துகிறது. உணவிற்கு நிறத்தை கொடுக்க இது பயன்படுகிறது. சலாமி, சாசேஜ் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உடல் சர்க்கரைப் பொருட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது ஆற்றலை அளிக்கிறது, ஆனால் சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும் போது, ​​அது மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் ஆகியவற்றை பாதிக்கிறது. 

மது அருந்துவதால் டிமென்ஷியா ஏற்படுகிறது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்  செய்த ஆராய்ச்சி ஒன்றில்,  மது அருந்துபவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link