எச்சரிக்கை! ‘இந்த’ பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்!
பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும். பூண்டு குளிர்சாதன பெட்டியில் ஈரப்பதத்தை உறிஞ்சும். பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பதால் மற்ற காய்கறிகளிலும் துர்நாற்றம் ஏற்படும்.
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும். ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளி சீக்கிரம் கெட்டுவிடும். இது தக்காளியின் சுவை மற்றும் ஊட்டச்சத்தையும் குறைக்கிறது.
உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்திருப்பதால், அதில் இருக்கும் மாவுச்சத்தின் தன்மை மாறுகிறது. அத்தகைய உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு.
வெங்காயத்தை காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். வெங்காயம் குளிர்சாதன பெட்டி போன்ற மூடிய இடத்தில் சேமிக்கப்படும் போது, அவை துளிர்க்க ஆரம்பிக்கும். வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைப்பதால் துர்நாற்றமும் வரத் தொடங்குகிறது.
வெள்ளரிக்கு குளிர்ச்சித் தன்மை உண்டு. குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால், அது மிகவும் குளிர்ச்சியாகி, ஆரோக்கியத்தைக் கெடுக்கும். மேலும், விரைவில் அழுகத் தொடங்கும்.