சீனப்பெருஞ்சுவர் குறித்த மர்மங்களும் சுவாரஸ்யங்களும்..!!!
இந்த சுவரின் நீளம் குறித்து சில சர்ச்சைகள் உள்ளன. 2009 இல் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், சுவரின் நீளம் 8,850 கி.மீ என்று கூறப்பட்டது, ஆனால் 2012 இல், சீனாவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு இது தவறு என்று நிரூபித்தது. சீன சுவரின் மொத்த நீளம் 21,196 கிலோமீட்டர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கை சீனாவின் முன்னணி செய்தித்தாளான சின்ஹுவாவிலும் வெளியிடப்பட்டது.
இந்தச் சுவரைக் கட்டிய கதை நானூறு ஆண்டுகள் பழமையானது அல்ல, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங் பெருஞ்சுவரைக் கட்ட விரும்பாலும், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. அவர் இறந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு சுவரின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் கட்டுமானம் கிமு ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கியதாக நம்பப்படுகிறது, இது 16 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. இது ஒரு மன்னரால் அல்ல, சீனாவின் பல மன்னர்களால் வெவ்வேறு காலங்களில் கட்டப்பட்டுள்ளது.
இந்த சுவர் சீனாவை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால், கி.பி 1211 இல், மங்கோலிய ஆட்சியாளர் செங்கிஸ்கான் இந்த சுவரை, ஒரு இடத்தில், உடைத்து அதைக் கடந்து சீனாவைத் தாக்கினார்.
சீனாவில், இந்த சுவர் 'வான் லி சாங் செங்' என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவரின் அகலம் மிக அதிகம். இந்தில் ஒரே நேரத்தில் ஐந்து குதிரைகள் அல்லது 10 வீரர்களை கடந்து செல்லும் அளவு அகலம் கொண்டது. இதை யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
இந்த பிரம்மாண்ட சுவரின் கட்டுமானப் பணிகளில் சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகிறது, இந்த சுவரை கட்டும் போது, சுமார் 10 லட்சம் உயிர் இழந்தனர். அப்போது இறந்த அந்த நபர்கள் சுவரின் அடியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீனப்பெருஞ்சுவர் உலகின் மிகப்பெரிய கல்லறை என்று அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான். இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. எனவே, இது ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.