Mask Free Countries: இந்த நாடுகளில் மாஸ்க் கட்டாயம் இல்லை..!!

Sun, 30 May 2021-5:59 pm,

இஸ்ரேலின் சுகாதார அமைச்சர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொது இடங்களில் மாஸ்க அணிவது  கட்டாயமில்லை என அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி இஸ்ரேல் கோவிட் -19 தடுப்பூசியைத போடத் தொடங்கியது. உலகின் மிக வேகமாக தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும். இங்கே, 8,39,000 கோவிட் தொற்று பாதிப்புகள் இருந்தன, 6,392 பேர் இறந்து விட்டனர்.

(Image Credit: Reuters)

 

பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் இந்த தொற்றுநோயை மிகச் சிறப்பாகக் கையாண்டார், இதன் காரணமாக இப்போது இந்த நாடும் மாஸ்க் ப்ரீ நாடாகிவிட்டது. இப்போது மக்கள் பொது போக்குவரத்து மற்றும் விமானங்களில் மட்டுமே மாஸ்க் அணிய வேண்டும். (Image Credit: Reuters)

 

ஹவாயில் கூட மக்கள் இனி மாஸ்க் அணியத் தேவையில்லை. இங்கே கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதோடு பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்பகுதியின் ஆளுநர், தடுப்பூசி போடாதவர்கள் வீட்டில் கூட மாஸ்க் அணிய வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அணிய தேவையில்லை என அறிவித்துள்ளார்.

(Image Credit: Reuters)

 

பூட்டானில், 18 வயதிற்கும் மேற்பட்டவர்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு வெறும் 2 வாரங்களில் தடுப்பூசி போட்டது. இந்த நாட்டிலும், மாஸ்க் பயன்படுத்துவது கட்டாயமில்லை. (Image Credit: Reuters)

 

அமெரிக்காவில் உள்ள நோய் தடுப்பு மையம் (CDC), தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இனி மாஸ்க் அணியத் தேவையில்லை என்று கூறியுள்ளது. இருப்பினும், சுகாதார மையங்களில் பணிபுரிபவர்கள் மாஸ்க் அணிய வேண்டியிருக்கும். ஆனால், தடுப்பூசி பெற்றவர்கள் விமானங்கள் உட்பட அனைத்து வகையான பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது மாஸ்க்  பயன்படுத்த வேண்டும்.

(Image Credit: Reuters)

கொரோனா வைரஸ்  தொற்றை உலகம் முழுவதும் பரப்பிய நாடான, சீனா மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை. இங்கே, அனைவருக்கும் இங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இங்கேயும், மருத்துவமனை மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது மட்டுமே மாஸ்க் அணிய வேண்டியது அவசியம்.

(Image Credit: Reuters)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link