வைர மழை பெய்யும் சூரிய மண்டலத்தின் மிக ஆபத்தான கிரகம் எது தெரியுமா..!!!

Fri, 06 Nov 2020-11:01 pm,

நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களிலும் பல ரகசியங்கள் மறைந்துள்ளன. சூரிய மண்டலத்தில் உள்ள நான்கு கிரகங்கள் வாயு கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் களிமண் மற்றும் கற்களுக்கு பதிலாக பெரும்பாலும் இதில் வாயுக்கள் தான் உள்ளன. இவற்றின் அளவு மிக அதிகம். இந்த கிரகங்களில் நெப்டியூன் கிரகமும் ஒன்றாகும். மீதமுள்ள மூன்று கிரகங்கள் வியாழன், சனி மற்றும் யுரேனஸ். நெப்ட்யூன் கிரகம் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இவ்வளவு குறைந்த வெப்பநிலையில் ஒருவர் உறைந்துபோய் ஐஸ் கட்டியாகி விடுவார்.

நமது சூரிய மண்டலத்தின்  எட்டாவது மற்றும் மிகத் தொலைவின் உள்ள கிரகமான நெப்ட்யூன், கணிதத்தை அடிப்படையாக கொண்ட கணக்கீடுகளின் படி கணிக்கப்பட்டது, பின்னர்  அந்த அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது. யுரேன்ஸின் சுற்றுப்பாதையில் சில விசித்திரமான இடையூறுகள் காணப்பட்டபோது இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டது

 

நெப்ட்யூன் கிரகம் முதன்முதலில் தொலைநோக்கி மூலம் செப்டம்பர் 23, 1846 இல் காணப்பட்டது. அப்போது தான் அதற்கு நெப்டியூன் என்று பெயரிடப்பட்டது. பண்டைய ரோமானிய மதத்தில் நெப்டியூன் கடலின் கடவுள் ஆவார். ரோமானிய மதத்தில், நெப்டியூன் தெய்வத்தின் கையில் ஒரு திரிசூலம் இருந்தது. எனவே நெப்ட்யூனுக்கான ஒரு வானியல் சின்னம் ”♆” ஆக உள்ளது.

உறைந்த மீத்தேன் வாயுவின் மேகங்கள் நெப்ட்யூன் கிரகத்தில் பறக்கின்றன. இங்குள்ள காற்றின் வேகம் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களை விட மிக அதிகம். இந்த கிரகத்தில் மீத்தேன் சூப்பர்சோனிக் காற்றைத் தடுக்க எதுவும் இல்லை, எனவே அவற்றின் வேகம் 1,500 மைல் வேகத்தை எட்டும்.

நெப்ட்யூனின் வளிமண்டலத்தில் கண்டென்ஸ்ட் கார்பன் இருப்பதால், இங்கு வைரங்கள் மழையாக பொழியும். ஆனால், மனிதன் எப்போதாவது இந்த கிரகத்திற்கு சென்றாலும், அவனால் இந்த வைரங்களை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் கடுமையான குளிர் காரணமாக அவன் அங்கே உறைந்து விடுவான்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link