Hawaii: வானம் தொடும் படிக்கட்டுகளை அகற்ற முடிவெடுத்தது ஏன்..!!!

Mon, 13 Sep 2021-2:30 pm,

ஹைக்கூ படிக்கட்டுகளை அகற்ற ஹொனலுலு நகர சபை கடந்த புதன்கிழமை ஒருமனதாக வாக்களித்தது. ஹொனலுலு அதிகாரிகள், இந்த படிக்கட்டு மிகவும் ஆபத்தான சுற்றுலா தளம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக கடந்த புதன்கிழமை ஹொனலுலு நகர சபை ஒருமனதாக வாக்களித்தது.

ஹைக்கூ படிக்கட்டுகளை காண ஒவ்வொரு நாளும் சுமார் 200 பார்வையாளர்கள் வருகின்றனர். இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரகசிய இராணுவ வானொலி தளத்தை அணுகுவதற்காக அமெரிக்க கடற்படை இந்த படிக்கட்டுகளை 1940 ஆம் ஆண்டு கட்டியதாக அறிக்கை கூறுகிறது. 1987 ஆம் ஆண்டில், கடலோர காவல்படை பாதுகாப்பு காரணங்களுக்காக அதை மூடியது. 

இந்த படிக்கட்டுகளில் ஏறுவது சட்டவிரோதமானது என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,000 சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். விதியை மீறுபவர்களுக்கு $1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. 2,480 அடி உயரம் செல்லும் படிகட்டுகளுக்கு 3,922 குறுகிய படிகள் உள்ளன.

இந்த படிக்கட்டுகள் ஓஹூ ஓஹு கூலாவ் மலைத்தொடரில் (Oahu Koolau Mountain Range)  கட்டப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளில் ஏறும் போது, மேகங்களுக்கு மத்தியில் சென்றது போல் உணர்வு ஏற்படுவதால், சொர்க்கத்திற்கு படிக்கட்டு' என்று அழைக்கப்படுகிறது.

 

ஹொனலுலு காவல் துறை  சட்டவிரோதமாக படி ஏறும் சுற்றுலா பயணிகளை கைது செய்துள்ளனர். இருப்பினும், மக்கள் அங்கு வருகிறார்கள். இதன் காரணமாக, படிக்கட்டுகளை அகற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

குலாவ் மலைத்தொடரில் கட்டப்பட்ட இந்த படிக்கட்டுகள் ஆபத்தான இடமாக நகர சபை கருதினாலும், இங்கு ஒரே ஒரு மரணம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு பாடகரும் நகைச்சுவை நடிகருமான ஃபிரிட்ஸ் ஹசன்புஷ், இந்த படிக்கட்டுகளில் ஏறும் போது மாரடைப்பு ஏற்பட்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link