Cuttlefish: 3 இதயங்களுடன் நீல நிற ரத்தம் கொண்ட உலகின் அபூர்வ மீன்
கட்டில்பிஷ் என்ற பெயரில் உள்ள இந்த மீன் நீல-இரத்தம் கொண்டது. மேலும் பச்சோந்தியைப் போல அதன் நிறத்தை மாற்றிக் கொள்ளும். எனவே ஆழ்கடலில் அதைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிய சவால் தான்.
இந்த கடல் மீனுக்கு ஆக்டோபஸ் போன்ற 8 கைகள் உள்ளன. அதன் 120 இனங்கள் கடலில் காணப்படுகின்றன. இது சிறிய மீன்கள், நண்டுகள், இறால் போன்றவற்றை உண்ணும்.
கடல் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள், 'அதன் இரத்தத்தின் நிறம் நீலம் அல்லது பச்சை நிறமாக இருப்பதற்கான காரணம் ஒரு சிறப்பு வகையான புரதமாகும். இந்த புரதத்தில் தாமிரம் காணப்படுகிறது, இதன் காரணமாக கட்டில்பிஷின் இரத்தத்தின் நிறம் பச்சை அல்லது நீலமாக இருக்கிறது.
மிகவும் தனித்துவமான விஷயம் என்னவென்றால், இந்த மீனின் உடலில், ஒன்று அல்ல மூன்று இதயங்கள் ஒரே நேரத்தில் துடிக்கிறது. வேறு எந்த உயிரினமும் அதைத் தாக்கும் போதெல்லாம், அது இருண்ட நிறத்தில் இருக்கும் புகையை வெளியிடுகிறது. இதன் காரணமாக எதிரியை சில நேரத்திற்கு குருடாக்கி தப்பிக்கிறது.
கட்ஃபிஷின் சிறப்பு என்னவென்றால், அவற்றின் சங்கு வெளிப்புறத்திற்கு பதிலாக உடலுக்குள் உள்ளது. கட்லிஃபிஷின் உடலுக்கு அத்தகைய அமைப்பை இருப்பதால், ஆழ்கடலில் எளிதில் நீந்தி செல்கிறது.
கட்ஃபிஷின் (cuttlefish) கண்கள் W வடிவத்தில் உள்ளன. அவை மிகப் பெரியவை, இதன் காரணமாக அது 180 டிகிரியில் இருக்கும் எந்த உயிரினத்தையும் பார்க்க முடியும். கட்ஃபிஷ் நிறங்களை வேறுபடுத்த முடியாது என்றாலும், உயிரினங்களின் அளவை வைத்து, அது வேட்டையாடும் உயிரினமா என்பதை புரிந்து கொள்கிறது