Diwali: சுற்றுச்சூழல் நட்பு தீபாவளியை கொண்டாடுவோமா?
அரிசி, மஞ்சள், பூக்கள், இலைகள் மற்றும் பருப்பு போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி அற்புதமான கோல தீபாவளியை கொண்டாடுவோம்…
(Photograph:Twitter)
தீபங்களின் திருவிழா தீபாவளி
வித்தியாசமான விளக்குகள் கொண்ட தோரணங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன, அவை இன்று கிட்டத்தட்ட எங்கும் காணப்படுகின்றன. பிளாஸ்டிக் அலங்கார பொருட்களை வாங்குவதற்கு மாற்றாக, நீங்கள் பழைய செய்தித்தாள்களுக்கு வண்ணம் தீட்டி அவற்றை விளக்குகள் போல தொங்கவிடலாம்.
(Photograph:Twitter)
பட்டாசுகள் எரிந்து, அவற்றின் நச்சுப் புகை காற்றில் கலந்து காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இன்றைய உலகில், அதிலும் குறிப்பாக கொரோனா யுகத்தில் காலநிலை மாற்றம் உலகையே கவலைக் கொள்ள வைக்கும் விஷயம்.
(Photograph:Twitter)
கடவுளை வணங்க ஆடம்பரம் தேவையில்லை... எளிமையாய் மலராஞ்சலி செலுத்தினாலே அது நறுமண சமர்ப்பணமாய் இருக்கும்...
தீபாவளி பரிசாக என்ன கொடுக்கலாம்? மனம் மலர மணக்கும் மனம் கவர் செடிகளை கொடுக்கலாமே!