ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் நிராகரிக்கப்படாமல் இருக்க...!

Sat, 06 May 2023-10:36 pm,

இன்சூரன்ஸ் க்ளெய்ம் செயல்முறை: பலர் தங்களின் ஹெல்த் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்கள் பல முறை நிராகரிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர். கிளைம் நிராகரிக்க சில அடிப்படை காரணங்கள் இருக்கலாம். எனவே அந்த தவறுகள் தவிர்க்கப்படுவதற்கு அவற்றை அறிந்து கொள்வது அவசியம். 

 

காப்பீட்டு பாலிசி எடுக்கும் போது, ஏற்கனவே இருக்கும் நோய்கள் அல்லது நிபந்தனைகளை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம். காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு இரத்த அழுத்தம், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், கடந்த காலத்தில் யாருக்காவது பெரிய அறுவை சிகிச்சை நடந்திருந்தால், அது குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்.  ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில், க்ளைம்களின் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க, காப்பீட்டாளரிடம் ஆரோக்கியம் தொடர்பான விவரங்களை நேர்மையாகப் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியம். 

உடல்நலக் காப்பீட்டில் காத்திருப்பு காலம் என்பது பாலிசியில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்தைக் குறிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் குறிப்பிட்ட நோய் அல்லது நிபந்தனைக்கு உரிமை கோர முடியாது. பாலிசிதாரர் சில நோய்களுக்கான காத்திருப்பு காலத்தின் கால அளவைப் பற்றிய தெளிவைப் பெற, பாலிசியின் காத்திருப்பு கால விதியை முழுமையாக படிக்க வேண்டும். காத்திருப்பு காலத்தில் க்ளைம் செய்தால், அது நிராகரிக்கப்படும்.

அனைத்து இன்சூரன்ஸ் பாலிசிகளும் கவரேஜ் மற்றும் விலக்குகளின் பட்டியலை தெளிவாகக் குறிப்பிடுகின்றன, மேலும் பாலிசிதாரர், குறிப்பாக விலக்கு பட்டியலின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு நோய்க்கான க்ளைம் செய்தால், க்ளைம் நிராகரிக்கப்படும். எனவே, பாலிசியை வாங்கும் போது விலக்கு  கொடுக்கப்பட்டுள்ள நோய்களின் பட்டியலைப் பார்க்க வேண்டும்.

பெரும்பாலான உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குக் உட்பட்ட ஒப்பந்தங்களாகும். இந்தக் பாலிஸி நடைமுறையில் இருக்க ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்தல் அவசியம். காலாவதியான பாலிஸிகளால் பலன் ஏதும் இல்லை . பாலிஸி காலாவதி ஆனாலும், 15 நாட்களுக்குள் அதனை புதுப்பித்து கொள்ளும் வசதியை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link